BREAKING: தேர்தல் முடிந்த கையோடு… அண்ணாமலைக்கு காத்திருக்கும் பதவி?…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

By Nanthini on சித்திரை 26, 2026

Spread the love

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, ஆந்திர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக (Rajya Sabha MP) தேர்வு செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலான தகவல்கள் கசிந்துள்ளன. ஆந்திராவில் வரும் ஜூன் 21-ம் தேதியுடன் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, காலியாகும் அந்த இடங்களை கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் (2 இடங்கள்), பாஜக (1 இடம்) மற்றும் ஜனசேனா (1 இடம்) எனப் பிரித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பாஜகவுக்கு ஒதுக்கப்படும் அந்த ஒரு இடத்தில் அண்ணாமலையை முன்னிறுத்த அக்கட்சியின் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் விரைவில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அவருக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் கட்சிப் பணிகளில் தீவிரமாக இருந்த அவர், தற்போது அண்டை மாநிலம் வழியாக நாடாளுமன்றத்திற்குச் செல்லவிருப்பது அரசியல் ரீதியாகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.