இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரால் இன்னல்களை சந்தித்து வருவது காசா மக்கள்தான். சுமார் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களால் இதுவரை அங்கு 59,029 பேர் பலியாகி இருப்பதாகவும் 1.42 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் கடந்த அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 1,219 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அதில் 49 பேர் இன்னும் காசாவில் உள்ளனர். இஸ்ரேல் ராணுவம் 27 பேர் இறந்துவிட்டதாக கூறுகிறது. இவ்வளவு உயிர் பலி நடந்த பிறகும் இஸ்ரேலின் கொலை வெறி இன்னும் அடங்கவில்லை. இன்று வரை தீவிர தாக்குதல் நடப்பது பெரும் சோகத்தை தருகிறது.
