தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனையில் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக சொல்லிக் கொண்டிருக்க ஈபிஎஸ் தான்தான் முதல்வர் வேட்பாளர் என மறுபக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை தாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் கூட்டணி ஆட்சி என்று பாஜகவினரும் தனித்து ஆட்சி என்று அதிமுகவினரும் கூறி வருகிறார்கள். இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது.
இப்படியான நிலையில் 2026 தேர்தல் கூட்டணியில் தங்களுடன் அமமுக இணைவதற்கு காலம்தான் பதில் சொல்லும் என இபிஎஸ் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் அமமுக கட்சியும் இருப்பது உறுதியாகி இருப்பதாக அரசியல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் இணைவாரா என்ற கேள்விக்கு காலம் கடந்து விட்டது என இபிஎஸ் பதிலளித்துள்ளார்.
