Video: வகுப்பறையில் ஆயில் மசாஜ்… செல்போனில் மெலோடி பாடல்… ஆசிரியை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம்..!!

By Soundarya on ஆடி 22, 2025

Spread the love

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ஒருவரின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில்,  சங்கீதா மிஸ்ரா என்ற ஆசிரியை தலையில் மசாஜ் செய்து, தலைமுடிக்கு எண்ணெய் தடவி, மொபைல் போனில் கிளாசிக்கல் பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனை தட்டிக்கேட்ட பெற்றோரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்களை தடியால் அடித்ததாகவும் அந்த ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆசிரியை சங்கீதா மிஸ்ரா என்ற ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விஷயத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, அடிப்படை கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, ஆசிரியர் சங்கீதா மிஸ்ரா குர்ஜா பகுதியில் உள்ள ஜமால்பூர் தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.