உலக அழகி ஐஸ்வர்யா ராயும் பாலிவுட்டின் டாப் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனும் கடந்த 2007-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இவருக்கு 12 வயது ஆகிறது. அடிக்கடி விருது வழங்கும் விழாக்களுக்கும், சினிமா விழாக்களுக்கும் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் ஆராத்யாவின் பள்ளி கட்டணம் குறித்து சோசியல் மீடியாவில் வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆராத்யா தற்போது மும்பை திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் எல்கேஜி முதல் 7-ஆம் வகுப்பு வரை 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதனையடுத்து 8-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பு வரை 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயும், 11- ஆம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை 9 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆராத்யாவின் பள்ளிக்கட்டணத்தை கேட்டதும் தலை சுற்றுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…