திடீர் திருப்பம்…. ராஜினாமாவை வாபஸ் பெறுகிறார் இசக்கி சுப்பையா?…. சபாநாயகர் அலவலகத்தில் பரபரப்பு….!

By Nanthini on புரட்டாதி 1, 2026

Spread the love

அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எதிர்பாராத திருப்பமாக, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏவாக மீண்டும் செயல்பட அனுமதி கோரி இசக்கி சுப்பையா சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடந்த 28-ஆம் தேதி மனு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதிநிதி இல்லாததால் அம்பாசமுத்திரம் தொகுதியில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமக்கு மீண்டும் எம்.எல்.ஏவாகச் செயல்பட வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை தாம் எம்.எல்.ஏவாகத் தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்றும், தாம் ஏற்கனவே அளித்த ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற விரும்புவதாகவும் கோரி இசக்கி சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். சபாநாயகரிடம் அளிக்கப்பட்ட மனு மற்றும் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஆகிய அடுத்தடுத்த சம்பவங்களால், அதிமுக உள்கட்சி அரசியலிலும் அம்பாசமுத்திரம் தொகுதி விவகாரத்திலும் புதிய சட்டப் போராட்டமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது.