ஐயோ… என் மகனைப் பார்க்க முடியாம போயிடுமா கடவுளே… 2 நாட்கள் கிணற்றுக்குள் தவித்து… உயிர் பிழைத்த 75 வயது மூதாட்டி… மனதை சிலிர்க்க வைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 75 வயது மூதாட்டி ஒருவர் தனது மகனின் வீட்டிற்குச் செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாகத் திறந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இருள் சூழ்ந்த அந்த ஆழமான கிணற்றில் உணவு மற்றும் தண்ணீரின்றி அவர் தவித்த நிலையில், இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிணற்றுக்குள் இருந்து சத்தம் வருவதைக் கண்ட அப்பகுதி இளைஞர்களும் காவல்துறையினரும் உடனடியாகச் செயல்பட்டு மீட்புப் பணியில் இறங்கினர். எந்தவித உணவுமின்றி, இரண்டு நாட்களாகத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, அவர்கள் அந்த மூதாட்டியைப் பாதுகாப்பாக மீட்டனர்.

   

https://twitter.com/TV9Telugu/status/2094675169788968994/video/1

   

இரண்டு நாட்கள் கிணற்றுக்குள் போராடிய போதிலும், எவ்வித உயிருக்கு ஆபத்தும் இன்றி அந்த மூதாட்டி உயிர் பிழைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சரியான நேரத்தில் உதவிகரமாக இருந்த இளைஞர்கள் மற்றும் காவல்துறையினருக்குப் பாராட்டுக்களும் குவிந்தன.