ஐயோ… சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது… கார் புகுந்த கோர விபத்து… இரண்டு குழந்தைகளின் தாய் பரிதாப பலி… 70 வயது முதியவரின் வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

மலாடு மேற்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கோர சாலை விபத்தில் 34 வயது பிரியங்கா சத்ரா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது கணவர் மயங்க் மற்றும் ஆறு பேர் படுகாயமடைந்தனர். குற்றவாளியான 70 வயது கிருஷ்ணா சாமங்கர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேக்கிற்கு பதிலாக தப்பதலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததாகக் கூறிய சாமங்கரைப் பரிசோதித்ததில் மது அருந்தவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த பிரியங்கா சத்ரா ஒரு சட்டப் பட்டதாரியும், இரண்டு சிறு குழந்தைகளின் தாயும் ஆவார்.

   

https://twitter.com/HateDetectors/status/2094734922795876710/video/1

   

உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கடும் நடவடிக்கை கோரியுள்ளனர். இதற்கிடையில், கைதானவர் மீது முறைகேடான சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை கோரப்பட்டுள்ளதுடன், சோகமான சூழலில் பிரியங்காவின் இறுதிச் சடங்குகள் நிறைவுபெற்றன.