இலங்கை மருத்துவமனையில் இறந்த இளையராஜாவின் மகள்.. உடலை சென்னைக்கு கொண்டு வருவது எப்போது..? வெளியான தகவல்..

By Mahalakshmi

Published on:

இசைஞானி  இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்களும் பவதாரிணி என்ற ஒரு செல்ல மகளும் இருக்கிறார்கள். மகன்கள் இருவரையும் போலவே பவதாரிணியும் இசை அமைப்பாளராகவும், பின்னணி பாடகியாகவும் திரையுலகினர் மத்தியில் வலம் வந்தவர்.  இளையராஜாவின் ஒரே மகளான பவதாரணி கேன்சர் நோயால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது உடல் இலங்கையில் இருந்து இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படும் என்ற தகவல் வெளியானது.

   

இளையராஜாவின் அன்பு மகள் பவதாரணி சபரீசன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து  கொண்டார். இந்த நிலையில், பவதாரிணிக்கு குழந்தைகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பவதாரிணி சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து கல்லீரலில் கல் இருக்கலாம் என சந்தேகப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் பவதாரிணியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஆயுர்வேத சிகிச்சை அளிக்க இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட சில நாட்களிலேயே அவருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதும், அதுவும் 4வது கட்டத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், இலங்கையில் இருந்து இன்று மாலை பவதாரிணி உடல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

author avatar
Mahalakshmi