தன் இசை மூலம் உலகையே மயங்க செய்த இசைஞானி இளையராஜாவின் மகளான பாடகி பவதாரணி நேற்று மாலை காலமானார். இவரின் மறைந்த செய்தி கேட்டு திரை உலகினர் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தன் அன்பு மகளான பவதாரணியின் உடலை காண இளையராஜா உலகையே வெறுத்து நொறுங்கிய முகத்துடன் கண்ணீர் மல்க சென்றார்.
இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த ஐந்து மாத காலமாக கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவர் இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது; இந்நிலையில் ஆயுர்வேத சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5:20 மணி அளவில் மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்றார்.
வித்தியாசமான குரல் வளம் கொண்ட பாடகி பவதாரணி பல பாடல்களை பாடியுள்ளார்.பாரதி படத்தில் மயில்போல பொண்ணு ஒண்ணு பாடல் மூலம் அறிமுகமானார். மேலும், அழகி படத்தில் “ஒளியிலே தெரிவது தேவதையா” என்ற பாடலையும் பவதாரணி பாடியுள்ளார். இந்த பாடல் படுகிட்டான நிலையில் பல பாடல்கள் பாடி திரை உலகில் தனக்கென தனி அடையாளத்தை பதித்தார்.அப்பா இளையராஜா மற்றும் சகோதரரான யுவன் சிங்கர் ராஜா இசையமைப்பிலேயே அதிக பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மறைந்த செய்தி திரையுலகினர் மத்தியில் தீயாக பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் உள்ள தனியார் ஆயுர்வேதா வைத்தியசாலையில் தனது மகளின் உடலை காண கவலை மிகுந்த முகத்துடன் இளையராஜா கண்ணீர் மல்க சென்ற காட்சி இணையதளத்தில் வீடியோ மூலம் பரவி பார்ப்பவர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.