இளையராஜா மகள் பவதாரணியின் இறப்பு குறித்து ஆடியோ வெளியிட்ட வடிவேலு.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

By Mahalakshmi

Published on:

இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளான பாடகி பவதாரணி மறைந்த செய்தி கேட்டு திரை உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை இசைஞானி இளையராஜாவிற்கு தெரிவித்து வருகின்றனர் நிலையில் இந்த வரிசையில் நடிகர் வடிவேலு பிரபல தொலைக்காட்சியில் இளையராஜாவின் மகள் இறந்த செய்தி கேட்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதாக ஆடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.

   

பின்னணி பாடகி பவதாரணி கடந்த ஐந்து மாதங்களாக பித்தப்பை அலர்ஜி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் உள்ள கொழும்பூர் தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பவதாரணி உயிரிழந்தார். இவரின் மறைவு திரைஉலகினர்  மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வித்தியாசமான குரல் வளம் கொண்ட பவதாரணி தனது பாடல் மூலம் பல பாடல்களை வெற்றி பாடல்களாக திரையுலகிற்கு தந்துள்ளார்.

நடிகர் வடிவேலு வெளியிட்ட ஆடியோவில் “எனது அண்ணன் இளையராஜாவின் அன்பு மகள், தங்க மகளான பவதாரணி இறந்த செய்தி கேட்டு நான் மிகவும் நொறுங்கி விட்டதாக அதில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் 47 வயதான பாடகி பவதாரணி தைப்பூசம் நாளில் இறந்ததால் முருகப்பெருமானின் காலடியில் சரணடைவார் என்றும்  வடிவேலு கூறியிருந்தார்.

மேலும் நடிகர் வடிவேலு தனது நெருங்கிய நண்பரான போண்டாமணி மற்றும் தன்னை  திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய கேப்டன் விஜயகாந்த் இறப்பிற்கு கூட இரங்கல் செய்தி  தெரிவிக்காத நிலையில்  திரை உலகினர்களும் ரசிகர்களும்  இவரை பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கினார்கள். மேலும் மக்களே ஆச்சரியப்படும்படி இளையராஜாவின் மகள் பவதாரணி மறைந்த செய்திக்கு ஆடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு. இந்த செய்தி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

author avatar
Mahalakshmi