தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பொதுநிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட வருகைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் எழுப்பியுள்ள கடுமையான விமர்சனம் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. துக்க வீடாக இருந்தாலும் சரி, சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, நடிகை த்ரிஷாவை உடனே அழைத்துச் செல்வதன் பின்னணி என்னவென்று கேள்வியெழுப்பிய அவர், “என்ன உறவின் அடிப்படையில் அவரை அழைத்துச் செல்கிறீர்கள்? உடன்பிறவாச் சகோதரியா அல்லது மனைவி-துணைவியா என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்” எனக் காட்டமாகச் சாடியுள்ளார்.
மேலும், இத்தகைய நடவடிக்கைகளால் தமிழகத்தின் அரசியல் கண்ணியம் சீர்குலைவதாகக் குற்றம்சாட்டியுள்ள இந்த பேச்சு, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
