விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…! கார் விபத்தில் சிக்கி 4 பேர் ரத்த வெள்ளத்தில் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்..!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலமாகுலா எல்லைப் பகுதியில், விநாயகர் சிலை விசர்ஜன விழாவை முடித்துவிட்டு மெட்டுகட்டா தண்டாவிலிருந்து ஷம்ஷாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த இன்னோவா கார் திடீரெனக் கோர விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர மோதலில் காரில் பயணித்த கேதாவத் லிம்பியா (54), கேதாவத் ஜமுனா (45), கத்ராவத் மான்சிங் (48) மற்றும் கேதாவத் வஸ்ராம் (45) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மகபூப்நகர் மாவட்டம் நவாப்பேட்டை மண்டலம் மெட்டுகட்டா தண்டாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

   

மேலும், காரில் இருந்த சபாவத் அசோக் என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு ஷம்ஷாபாத்தில் உள்ள ட்ரைடண்ட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட முடிவில் அரங்கேறிய இந்த கொடூர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.