“லிஃப்ட்டிற்குள் செக்யூரிட்டி கார்டுக்கு பளார்…” அதிகார தோரணையில் அராஜகம் செய்த நபர்…. பண்றது எல்லாமே தப்பு…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

By Devi Ramu on புரட்டாதி 19, 2026

Spread the love

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இகோ வில்லேஜ் 2 குடியிருப்பு வளாகத்தில், நவீன் பஸ்வான் என்ற வாடகைதாரர் தனது காரை பார்க்கிங் செய்யக்கூடாத ‘நோ-பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தியுள்ளார். அங்கிருந்த செக்யூரிட்டி கார்டு காரை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கூறியதை அடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த செக்யூரிட்டி கார்டு நவீனைப் பின்தொடர்ந்து லிஃப்ட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த நவீன் பஸ்வான், லிஃப்ட்டிற்குள் வைத்து அந்தச் செக்யூரிட்டி கார்டை சரமாரியாகக் கன்னத்தில் அறைந்தும், கைகளால் குத்தியும் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.

லிஃப்ட்டிற்குள் இருந்த சக செக்யூரிட்டிகளும் ஒரு பெண்ணும் ஓடிவந்து அவரைத் தடுக்க முயன்ற காட்சிகளும், தாக்குதலின் கொடூரமும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் தீயாய் பரவியது. இச்சம்பவம் தொடர்பாகச் சொசைட்டி நிர்வாகமும் பாதிக்கப்பட்ட செக்யூரிட்டியும் புகார் அளித்ததை அடுத்து, பிஸ்ராக் போலிஸார் வழக்குப் பதிவு செய்து நவீன் பஸ்வானைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.