Connect with us

CINEMA

முத்து பட நடிகை விசித்ராவின் மகனா இது…. நடிகையே வெளியிட்ட வீடியோ…

90களில் காமெடி நடிகர் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் நடிகை  விசித்ரா. இவர் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ன பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் .

வெள்ளி திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர். இவர் நடிப்பில் முதலில் வெளியான படம் ‘ஜாதிமல்லி’. இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் இப்படம் வெளியானது. சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே சீரியலிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

   

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ படத்தில் இவர் நடித்த ரதிதேவி என்கிற கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் சினிமா துறைக்கு குட் பாய் கூறினார். தம்பதியினருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தற்பொழுது பூனேவில் வசிக்கும் விசித்ரா சமூக வலைத்தளங்களில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தற்சமயத்தில் அவர் தனது மகனுக்காக ஹெல்மெட் வாங்கும் பொழுது எடுத்த வீடியோவை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்முத்து  பட நடிகை விசித்ராவின் மகனா இது?  என்று கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vichitra (@vichu_90)

Continue Reading

More in CINEMA

To Top