அட இவர்தான் நடிகை குஷ்புவின் அம்மாவா?….முதன்முதலாக இணையத்தில் வெளியான UNSEEN புகைப்படம் உள்ளே…

By Begam

Published on:

நடிகை குஷ்பூ தன் அம்மாவுடன் காணப்படும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தமிழில் பிரபு நடிப்பில் வெளியான ‘சின்னத்தம்பி’ படத்தில் நடித்து குஷ்பூ மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழின் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், சரத்குமார் அனைத்து நடிகர்களுடனும் நடித்து முன்னணி நடிகையானார்.

   

 

அந்த கால இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த குஷ்பூவிற்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் என்பது யாராலும் மறக்க முடியாத ஒன்று. சினிமாவில் கொடிக்கட்டி பறந்த வந்த குஷ்பூ, ‘முறைமாமன்’ படத்தை இயக்கிய சுந்தர்.சி -யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சுந்தர்.சி-குஷ்பூ தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இருமகள்கள் உள்ளனர். நடிகையாக இருக்கும் குஷ்பூ தயாரிப்பாளராகவும், சின்னத்திரை நடிகையாகவும் வலம் வருகிறார். தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

நடிகை குஷ்பூ தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்பொழுது நடிகை குஷ்பூ தனது அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இப்புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….