‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சியில் களமிறங்கும் மீண்டும் ஒரு இலங்கைப் போட்டியாளர்…விஜய் டிவியின் அதிரடி முடிவு….

By Begam on ஐப்பசி 2, 2022

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்பொழுது  ஆறாவது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

 

   

இந்த சீசனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குவார் என்பது விஜய் டிவியின் ப்ரோமோ மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த சீசனில்  பிரபலங்களை தவிர்த்து பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆடிஷனும் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

 

இதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த ‘லாஸ்லியா’ எவ்வாறு அறிமுகமானாரோ,அதைப்போல் இலங்கையை சேர்ந்த மற்றொரு போட்டியாளரை பிக்பாஸ் சீசன் 6 ல் களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.