நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் மற்றும் நடிகர் சிம்புவுடன்…எப்படி இருக்காங்கனு பாருங்க…இணையத்தில் வெளியான அரிய புகைப்படம் இதோ…

By Begam on ஐப்பசி 2, 2022

Spread the love

நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாகசைதன்யா மற்றும் நடிகர் சிம்புவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சிம்பு. கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு, த்ரிஷா, விடிவி கணேஷ் ஆகியோர் நடித்திருந்த படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இயக்குனர் கௌதமின் படங்களில் இந்த படம் அதிகம் பேருக்கு பிடித்தமான ஒரு காதல் படமாகும்.முக்கியமாக காதலர்களின் வாழ்க்கைக்குள் புகுந்து அழுத்தத்தை ஏற்படுத்திய படம் இது என்றும் சொல்லலாம்.

   

   

நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. கவுதம் மேனன் – சிம்பு கூட்டணியில் உருவாகிய மூன்றாவது வெற்றி திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இவர்கள் இருவரும் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் மூலமாக தான் முதல் முறையாக இணைந்தார்கள்.

 

 

இப்படத்தின் ஒரு சிறு கதாபாத்திரங்களில் நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா நடித்திருந்தார்கள். தற்பொழுது விண்ணைத்தாண்டி வருவாயா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சமந்தா தனது முன்னாள் கணவர் நாகசைதன்யா மற்றும் நடிகர் சிம்புவுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.