விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகர் சந்தானம். அதன் பின்னர் வெள்ளித்திரையில் ‘மன்மதன்’ படத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் அடுத்தடுத்து பல காமெடி படங்களில் நடித்து புகழ்பெற்று, தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த காமெடி நடிகர் என்ற பெயரினையும் பெற்றார்.
இவர் திரைத்துறையில் ஒரு கட்டத்திற்கு பின்னர் ஹீரோவாக நடித்தார். நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படங்கள் தில்லுக்குதுட்டு, ஏ ஒன், டகால்டி போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. காமெடியனாக திரையுலகில் கால் பதித்து தற்பொழுது ஹீரோவாக கலக்கி வருகிறார் நடிகர் சந்தானம்.
இவர் நடிப்பில் வெளியான ‘குலு குலு’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அடைந்தது .இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படம் ரிலீசானது. தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
நடிகர் சந்தானம் ‘உஷா’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். இதுவரை இவரின் மனைவி பிள்ளைகளின் புகைப்படங்கள் அவ்வளவாக இணையத்தில் வெளியானது கிடையாது. தற்பொழுது முதன்முறையாக நடிகர் சந்தானத்தின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

#image_title