என்னப்பா சொல்றிங்க.. Good Bad Ugly படத்தில் அஜித்துக்கு ஜோடியாக 22 வயது இளம் நடிகையா..?

By Begam on ஏப்ரல் 25, 2024

Spread the love

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து அஜித் 63 படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

   

சமீபத்தில் இது தொடர்பான அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், இப்படத்தை இயக்குவதால் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

   

 

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் அவர் நடித்தபோதே கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது. அதன்படி அஜித் – ஆதிக் கூட்டணி இணைந்திருக்கிறது. படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க உள்ளனர். விறுவிறுவென ஷூட்டிங்கை நடத்தி முடித்து படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் அஜித் மூன்று கெட்டப்புகளில் தோன்றவிருப்பதாகவும், படம் காமெடி ஜானரில் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் படத்தில் நடிக்கவுள்ள ஹீரோயின் குறித்த தகவல் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அவர் வேறு யாருமில்லை, தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா தான். ஒருபுறம் இவர்தான் அஜித்துக்கு ஜோடி என்றும், மறுபுறமோ முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க போகிறார் என்றும் கூறி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.