இதெல்லாம் நடிகர் ராமராஜன் இயக்கிய படங்களா?… பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். 1987 முதல் 1990 வரை பிஸியான நடிகராக இருந்தார். அப்போது அவரின் தங்கமான ராசா திரைப்படம் ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் வசூலையே தாண்டியதாம். ஆனால் 90 களுக்குப் பிறகு ராமராஜனின் மார்க்கெட் சரிய ஆரம்பித்துள்ளது.

ராமராஜனின் சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததே ஒரு இன்ப விபத்துதான். ராமராஜன்(அப்போது குமரேசன்) மதுரை மேலூரில் இருக்கும் ஒரு தியேட்டரில் டிக்கட் கிழிக்கும் வேலை செய்து வந்தார். அந்த தியேட்டர் ஓனர் மூலமாக சென்னை வந்து இராமநாராயணன் ஆபிஸ்ல ஆபிஸ் பாயா வேலை பார்தவர் அவரிடமே உதவி இயக்குனர் ஆனார்.

   

அப்படி 40 படங்களுக்கு மேல் உதவி இயக்குனராக வேலை செய்த அவர் இதுவரை 11 படங்களை இயக்கியும் உள்ளார். இது பலரும் அறியாத தகவல். 1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார்.

இதன் பின்னர் அவர் அவரே கமர்ஷியல் மதிப்புள்ள கதாநாயகன் ஆகிவிட்ட நிலையில் அதன் பின்னர் தன்னையே அவர் கதாநாயகனாக்கி படங்களை இயக்க ஆரம்பித்தார். அவை ஒன்று எங்கள் ஜாதியே, அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊரு ராசா, கோபுர தீபம், விவசாயி மகன், சீரிவரும் காளை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவற்றில் அவர் தன்னை தானே கதாநாயகனாக்கி இயக்கிய படங்கள் பெரும்பாலானவை தோல்வி படங்களாக அமைந்தன. அதனால் அவர் ஹீரோவாக நடித்த படங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதனால் அவர் திரையுலகில் இருந்து 15 ஆண்டுகளுக்கும் மேல் இடைவெளி எடுக்க வேண்டிய சூழல் உருவானது. இப்போது அவர் சாமான்யன் என்ற படத்தின் மூலம் மீண்டும் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார். அந்த படம் மே 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.