சர்க்காரியா கமிஷன், மிசா மற்றும் கட்சி நிதி விவகாரங்களில் தவெக தலைவர் விஜய் எழுப்பிய கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாகப் பதிலளிக்காமல் அமைதி காப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இடைத்தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், தமக்கு மாற்றாகப் பிரச்சாரத்தையும் அரசியல் பதிலடிகளையும் முன்னின்று நடத்த உதயநிதி ஸ்டாலினையே பிரதானப்படுத்த ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாரோ என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.
தலைவரின் இந்த வியூகமும் ஒதுங்கியிருக்கும் போக்கும், விஜய்யின் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படவில்லையே என்ற அதிருப்தியை திமுக சீனியர் தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடையே மெல்ல ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
