நெல்லை பெட்ரோல் பங்ககில் நொடில நடந்த அதிர்ச்சி… காரில் பூட்டிக்கொண்ட 1 வயது குழந்தை… பதறித் துடித்த பெற்றோர்….!

By Nanthini on புரட்டாதி 8, 2026

Spread the love

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு, அன்சாரி என்பவர் தனது ஒரு வயதுக் குழந்தையுடன் காரில் எரிபொருள் நிரப்ப வந்துள்ளார். அவர் காரை விட்டு கீழே இறங்கி எரிபொருளுக்கான பணத்தைச் செலுத்திக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராதவிதமாக அவரது சொகுசு கார் திடீரென உள்பக்கமாகத் தானாகவே பூட்டிக்கொண்டது. காருக்குள் ஒரு வயதுக் குழந்தை தனியாகச் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காரின் மாற்றுச் சாவியைக் கொண்டும் பல்வேறு வழிகளிலும் கதவைத் திறக்கக் கடுமையாக முயன்றனர். இருப்பினும் கதவைத் திறக்க முடியாததால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.

நீண்ட நேரமாகியும் கதவை திறக்க முடியாத சூழலில், குழந்தையின் பாதுகாப்பைக் கருதி காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துச் குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, காரின் பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டது. காருக்குள் தவித்துக் கொண்டிருந்த ஒரு வயதுக் குழந்தை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து பெற்றோரும், அங்கிருந்த பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.