#image_title
இந்து மதத்தில் பொதுவாக ஆன்மீக ரீதியாக பழைய விஷயங்கள் கடைபிடிக்கப்படுகிறது. சகுனம் அபசகுணம் என பறவைகள் விலங்குகளை வைத்து நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வந்துள்ளனர். காகம் கரைவது, அணில் வருவது, பல்லி சத்தமிடுவது போன்றவைகளை சகுனத்திற்காக எடுத்துக் கொள்வர் நம் முன்னோர்கள். அதில் ஒன்றுதான் வீட்டில் குளவி கூடு கட்டுவது. நம் வீட்டில் குளவி கூடு கட்டினால் நல்லதா? கெட்டதா? நல்ல சகுனமா? அபசகுனமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அவற்றைப் பற்றி இதில் விரிவாக காண்போம்.
வீட்டில் குளவி கூடு கட்டினால் அந்த வீட்டில் குழந்தை தவள போகிறது என்று பொதுவாக சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அனைவரது வீட்டிலும் புழு, பூச்சிகள், எறும்பு, பல்லி போன்றவைகள் இருந்தாலும் தேனி அல்லது குளவி போன்றவைகள் கூடு கட்டுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது. குளவிகள் இனப்பெருக்கத்திற்காக கூடு கட்டுகிறது என்றாலும் எல்லோர் வீட்டிலும் குலவி கூடு கட்டுவது இல்லை. எந்த வீட்டில் நல்ல சக்திகள் இருக்கிறதோ அந்த வீட்டிலே தான் குலவி கூடு கட்டும். குளவி வீடுகட்ட பயன்படுத்தும் மண் மிகவும் தூய்மையானதாக இருக்கும். அதே போல் எந்த வீடு மிகவும் சுத்தமாக லட்சுமி கடாட்சத்தோடு இருக்கின்றதோ அந்த வீட்டில் தான் குளவி கூடு கட்டும்.
வீட்டில் சிறிய குளவி கூடு காட்டினால் பணவரவு, புதிய நிதிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை காட்டுகிறது. பூஜை அறையில் குளவி கூடு கட்டி இருந்தால் நம் வீட்டிற்கு ஐஸ்வர்யம் உண்டாகும். நம் வீட்டின் கதவில் குழவி கூடு கட்டினால் வீட்டில் லட்சுமி வாசம் செய்கிறாள் என்று அர்த்தம். கதவின் மேலே உள்ள நிலையில் கூடு கட்டி இருந்தால் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும், செல்வம் பெருகும் மற்றும் வீட்டில் தானிய செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
இவையெல்லாம் வீட்டில் குளவி கட்டுவதற்கான நற் சகுணங்களை காட்டுகிறது. இதுபோன்று சில கட்டக்கூடாத இடத்தில் குளவி கட்டினால் அது அபசகுனமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது சமையலறையில் நெருப்பு புழங்கும் இடத்தில் குழவி கூடு கட்டினால் வீட்டில் செலவுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சில நேரங்களில் குலவி கூடு கட்டி விட்டு அதில் தங்காமல் கூட்டை விட்டு வெளியேறி சென்று விட்டால் அந்த வீட்டில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம். அது அபசகுனமாக கருதப்படுகிறது.
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…