அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம், விரைவில் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியபோது, சி.வி. சண்முகம் அவர்களுடன் செல்லாமல் தவிர்த்ததுடன், கட்சித் தலைமையின் மீதுள்ள தனது கடுமையான அதிருப்தியையும் வெளிப்படையாகத் தெரிவித்து வந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், தற்போதைய அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முறைப்படி தவெகவில் இணைந்து புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகப் பரவலாகக் கூறப்படுகிறது.
