ச்சீ.. அறிவே இல்லையா…? அழுத குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைத்த ஊழியர்கள்… ஐடி நிறுவனத்தில் நடந்த பகீர் சம்பவம்…! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

By Swetha on ஆடி 2, 2026

Spread the love

பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள கேப்கெமினி தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில், ‘லிட்டில் பட்ஸ் டே கேர்’ என்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு பராமரிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் அழுது கூச்சலிடும் போது, அவர்களை மிரட்டுவதற்காக வாஷிங் மெஷின்களுக்குள் அடைப்பது, குறுகிய தண்ணீர் குழாய்களுக்குள் கட்டாயப்படுத்தி தள்ளுவது, கழிவறைகளில் பூட்டி வைப்பது மற்றும் கொடூரமாக அடிப்பது போன்ற சித்திரவதைகளில் அங்குள்ள ஊழியர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காப்பகப் பொறுப்பாளர் உட்பட ஐந்து பெண் ஊழியர்கள் மீது ஜுவளனல் ஜஸ்டிஸ் சட்டம் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தக் கொடூரமான சம்பவங்கள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு கடந்த ஜூன் 25 அன்று வந்த ரகசிய அழைப்பின் மூலமே விசாரணை தீவிரமடைந்தது. இந்தத் துஷ்பிரயோகங்கள் குறித்து முன்னரே காப்பக நிர்வாகத்திடம் புகாரளித்த ஒரு ஊழியரின் புகாரை காப்பக நிர்வாகம் முற்றிலும் புறக்கணித்ததோடு, இந்த விவகாரம் வெளியே தெரிவதற்கு முன்பாகவே அந்த ஊழியரை பணியில் இருந்தும் நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விசிலூதி ஊழியர் அளித்த ஆதார வீடியோக்களை குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் போலீஸார் ஆய்வு செய்தபோது, அங்குள்ள பின்னணி அமைப்புகளும் ஊழியர்களின் முகங்களும் ஒத்துப்போனதால் இந்த அத்துமீறல்கள் உறுதி செய்யப்பட்டன.

   

இங்கு பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பது குறித்து பெற்றோருக்கு எந்த விபரமும் தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், பாதுகாப்பு காரணங்களுக்காக கேப்கெமினி ஊழியர்கள் இந்த காப்பகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது, இந்த அவலநிலைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தற்போது, இந்த காப்பகத்தை ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனம் நடத்தி வந்ததால் தங்களுக்கு இதில் நேரடிப் பங்கில்லை என்று கேப்கெமினி கூறியுள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த காப்பகத்தை தற்காலிகமாக மூடியுள்ளது. மேலும், முழுமையான விசாரணைக்கு உரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.