தளபதி 69 அப்டேட்… இவ்ளோ பெரிய பிளாப் கொடுத்த இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிக்கிறாரா நடிகர் விஜய்…? வெளியான ஷாக்கிங் தகவல்…

By Begam on கார்த்திகை 24, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வசூலிலும் சாதனை படைத்தது. இத்திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி  அன்று வெளியாகி, வெளியான முதல் நாளே 148 கோடிக்கு மேல் வசூல் செய்து உலகம் முழுவதும் சாதனை செய்தது.

   

இதைத் தொடர்ந்து தற்பொழுது வரை 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 68’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

   

 

இந்நிலையில் தற்பொழுது தளபதி 68 திரைப்படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்காக கமிட்மென்ட்டில் இறங்கி உள்ளாராம். அதன்படி இவர் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்துள்ளதாக கூறப்பட்டும் வருகிறது. இயக்குனர்நெல்சன் உடன்  இணைந்து நடிகர் விஜய் நடிப்பில் 2002இல் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.

 

ஆனால் இத்திரைப்படம் நடிகர் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது என்று நெல்சன் பல இடங்களில் கூறியிருந்தார். இந்நிலையில் தளபதி விஜய், நெல்சன், சன் பிக்சர்ஸ் கூட்டணியில் அடுத்த திரைப்படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி 68 திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் தான் எனவும் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.