சார் தாம் கோயிலுக்கு ட்ரிப் போக ரெடியா?….. கம்மி பட்ஜெட்டில் IRCTCயின் நியூ பேக்கேஜ்….விவரங்கள் இதோ…..!

By Srimathi on புரட்டாதி 3, 2025

Spread the love

நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருந்தும், சார் தாம் கோயிலை பார்வையிட மக்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். இந்த ஆண்டிற்கான சார் தாம் யாத்திரை பதிவு தொடங்கிவிட்டது. மேலும் இந்த யாத்திரைக்கான தொகுப்பை தற்போது IRCTC அறிவித்துள்ளது. இந்தப் பயணம் டெல்லியில் இருந்து தொடங்கி, 12 பகல் மற்றும் 11 இரவுகளை கொண்டதாக அமையும். இது செப்டம்பர் 1, 12, 24 மற்றும் அக்டோபர் 1, 15 ஆகிய தேதிகளில் தொடங்க உள்ளது.

தொகுப்பு கட்டணம்

   
  • தனி ஒரு நபருக்கு தங்கும் வசதியுடன் – ரூ. 79000 ஆகும்
  • 2 நபர் தங்கும் வசதி – ரூ. 54,000
  • 3 நபர் தங்கும் வசதி – ரூ. 49,000
  • குழந்தை (5-11 வயது, படுக்கையுடன்) – ரூ. 30,000
  • குழந்தை (5-11 வயது, படுக்கை இல்லாமல்) – ரூ. 22,000

இந்தப் பயணம் டெல்லியில் இருந்து தொடங்கி ஹரித்வார்பர்கோட்யமுனோத்ரிஉத்தர்காசிகங்கோத்ரிகுப்த்காஷிகேதார்நாத்பத்ரிநாத்ருத்ரபிரயாக்/ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் முடிவடைந்து. பின்னர் ஹரித்வார் மற்றும் டெல்லிக்கு திரும்பும். அனைத்து இடங்களிலும் தங்கும் வசதி அமைக்கப்பட்ட தரும். டெல்லியில் இருந்து திரும்புவதற்கு பயணம், ஏசி டெம்போ ட்ராவலர் மூலம் அமையும். இதில் காலை உணவு மற்றும் இரவு உணவு உள்ளடங்கும்.

   

எந்த சேவைகள் இத்தொகுப்பில் இல்லை

 

ஹெலிகாப்டர் கட்டணங்கள், குதிரை வண்டி – பல்லாங்குழி கட்டணங்கள், வழிகாட்டி கட்டணம், தனிப்பட்ட செலவுகள், கூடுதல் உணவு அல்லது சுற்றிப் பார்ப்பது, போன்றவற்றை இத்தொகுப்பில் சேராது.