தெலுங்கானாவில் இரண்டு முறை ஆட்சியில் இருந்த BRS கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. உட்கட்சி பிரச்சனையால் நேற்று அதன் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா இடைநீக்கம் செய்யப்பட்டார். தனது வெளியேற்றத்துக்கு கட்சியின் மூத்த தலைவர்கள்தான் காரணம் என்று கூறும் கவிதா, நாளை தனி கட்சி தொடங்க உள்ளதாகவும் அதற்கு BRS கட்சியின் முதல் பெயரான தெலுங்கானா ராஷ்டிர(TRS) சமிதி என்பதையே வைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
