“ஒரு சொட்டு எண்ணெய் கூட கிடைக்காது!”… அமெரிக்காவின் மிரட்டலைத் தூக்கி எறிந்த ஈரான்… கலக்கத்தில் உலக சந்தை…!!!

By Rajeshwari on பங்குனி 10, 2026

Spread the love

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவாகியுள்ளது. ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தால் அல்லது எண்ணெய் போக்குவரத்தைத் தடுத்தால், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் என்றும், முன்னெப்போதும் இல்லாத வகையில் 20 மடங்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும் ஈரானின் புதிய உச்சத் தலைவராக மோஜ்தபா கமேனி பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தப் போர் நீண்ட காலத்திற்குத் தொடரும் என்ற அச்சத்தால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரான் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தங்கள் நாட்டின் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ அல்லது ஹார்முஸ் நீரிணையைத் தன்வசப்படுத்த முயன்றாலோ, உலக நாடுகளுக்கு “ஒரு லிட்டர் எண்ணெய் கூட கிடைக்காது” என்று ஈரான் எச்சரித்துள்ளது.

   

இந்நிலையில் தங்களின் ராணுவப் படைகள் நீண்ட காலப் போருக்குத் தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு இப்போது இடமில்லை என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதற்றமான சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.