“வெறும் 360 கி.மீ வேகம்.. 15 கி.மீ தூரத்தில் மரண பயம்”… ஹார்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் ஈரானின் மர்ம ஆயுதம்… அமெரிக்காவை நடுங்க வைத்த அந்த செய்தி..!

Spread the love

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், ஈரான் கடற்படைத் தளபதி ஷாராம் இரானி விடுத்துள்ள மர்ம எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. எதிரிகளுக்கு மிக அருகிலேயே ஒரு புதிய ஆயுதம் இருப்பதாகவும், அதைப் பார்த்தாலே அவர்களுக்கு “மாரடைப்பு” ஏற்படும் என்றும் அவர் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இந்த மர்ம ஆயுதம் ஈரானின் ரகசியத் தயாரிப்பான ‘ஹூட்’ (Hoot) ஏவுகணையாக இருக்கலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். பெர்சிய மொழியில் திமிங்கிலம் என்று அழைக்கப்படும் இந்த ஆயுதம், கடலுக்கு அடியில் ஒலியை விட வேகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது.

இந்த ‘ஹூட்’ ஏவுகணை சாதாரணமான டோர்பிடோக்களை விட முற்றிலும் மாறுபட்டது. பொதுவாக நீர் என்பது காற்றை விட அடர்த்தி அதிகம் என்பதால், சாதாரண டோர்பிடோக்கள் மணிக்கு 100 கி.மீ வேகத்தைத் தாண்டுவதே கடினம். ஆனால், ‘சூப்பர்-கேவிடேட்டிங்’ (Super-cavitating) எனும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஹூட், தன்னைச் சுற்றி ஒரு காற்று குமிழியை (Gas Bubble) உருவாக்கி நீரின் எதிர்ப்பைக் குறைக்கிறது. இதன் மூலம் மணிக்கு சுமார் 360 கி.மீ வேகத்தில் ஒரு புல்லட்டைப் போலப் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் இதற்கு உண்டு.

இருப்பினும், இந்த அதிவேக ஆயுதத்திற்கு சில பலவீனங்களும் உள்ளன. இதன் மின்னல் வேகத்தால் எரிபொருள் மிக விரைவாகத் தீர்ந்துவிடும் என்பதால், சுமார் 15 கி.மீ தொலைவிற்குள் இருக்கும் இலக்குகளை மட்டுமே இதனால் தாக்க முடியும். இது சாதாரண டோர்பிடோக்களின் தூரத்தை விடக் குறைவு என்பதால், எதிரிக் கப்பல்களுக்கு மிக அருகில் சென்றே இதை ஏவ முடியும். அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ போன்ற பிரம்மாண்டப் போர்க்கப்பல்களை நெருங்குவது தற்கொலை முயற்சிக்குச் சமமானது என்றாலும், ஹார்முஸ் ஜலசந்தி போன்ற குறுகிய கடல் பகுதிகளில் பதுங்கியிருந்து தாக்கினால் இது பெரும் சேதத்தை விளைவிக்கும்.

ஈரானின் இந்த அறிவிப்பு ஒரு ‘உளவியல் போர்’ (Psychological Warfare) என்று விமர்சிக்கப்பட்டாலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த மிரட்டலை உற்று நோக்கி வருகின்றன. அதிவேகமாக வரும் இந்த ஏவுகணையை சோனார் கருவிகளால் கண்டறிந்து தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்குள் தாக்குதல் நடந்து முடிந்துவிடும் என்பதே இதன் மிகப்பெரிய பலம். போர்க்களத்தில் தொழில்நுட்ப ஆச்சரியங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், ஈரானின் இந்த “மாரடைப்பு” ஆயுதம் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் ஒரு விவாதப் பொருளாகவே நீடிக்கிறது.

Nanthini

Recent Posts

பகீர்… மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு… கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவன்… குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்…!!

சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னை கல்யாணம் பண்ணிக்க… திருமணத்திற்கு No சொன்ன காதலி… ஸ்கெட்ச் போட்டு காரில் கடத்தி.. கொலை செய்த காதலன்… மத்தியப் பிரதேசத்தை உலுக்கிய பகீர் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே… சிங்கப்பூரில் இருந்து உள்ளாடைக்குள்… 43 சவரன் தங்கத்தைக் கடத்திய பயணி… வளைத்துப் பிடித்த சுங்கத்துறை… விமானத்தில் பரபரப்பு…!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதை பழக்கம் தெரிந்து திருமணம் நின்றதால் ஆத்திரம்… பெண்கள் மீது ஆசிட் வீசிய கொடூரன்… உ.பி.யில் அரங்கேறிய பயங்கரம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…

4 மணத்தியாலங்கள் ago

சீச்சீ…! “சாக்கடை அருகில் சேமிக்கப்பட்ட சமோசாக்கள்…” சமையலுக்கு வடிகட்டாத தண்ணீர் பயன்பாடு… உணவு பாதுகாப்பு துறை அதிரடி…!!

மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…

5 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… பயிற்சியின் போது ஆற்றில் கவிழ்ந்த படகு… கண் இமைக்கும் நேரத்தில் மாயமான ராணுவ வீரர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…

5 மணத்தியாலங்கள் ago