ரூ 5 லட்சம் முதலீடு செய்தால் ரூ 15 லட்சம் திரும்ப கிடைக்கும். Post Office – இன் அசத்தலான இந்த திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க…

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் சேமிப்பை தொடங்கி விட்டார்கள். சேமிப்பு இருந்தால் தான் வருங்காலத்தில் நல்ல வாழ்க்கை வாழ முடியும் என்று புரிந்து கொண்டார்கள். சேமிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சிலர் கையிலிருக்கும் பணத்தை முதலீடு செய்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் மற்றும் பெருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அப்படி நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை நீண்ட நாட்களுக்கு நல்ல இடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் Post Office- இன் இந்த சிறப்பான திட்டம் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதைப்பற்றி இனி காண்போம்.

நீங்கள் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்றால் போஸ்ட் ஆபீஸில் இந்தத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யும்போது முதிர்வு காலத்தில் நீங்கள் முதலீடு செய்யப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு உங்களுக்கு பணம் கிடைக்கும். அதுதான் போஸ்ட் ஆபீஸ் டேர்ம் டெபாசிட் ஆகும். தாபால் அலுவலகத்தில் இந்த FD திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்யும் போது வங்கிகளை விட அதிக வட்டி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் முதலில் ஒரு ஐந்து லட்ச ரூபாய் கையில் வைத்திருக்கிறீர்கள் என்றால் போஸ்ட் ஆபீஸ் FD- இல் இந்த ஐந்து லட்சத்தை முதலில் ஐந்து வருடத்திற்கு முதலீடு செய்ய வேண்டும்.

இந்த 5 வருட FD க்கு தபால் அலுவலகம் 7.5% வட்டியை வழங்குகிறது. அப்போது ஐந்து வருடங்கள் கழித்து உங்களது 5 லட்ச ரூபாய் பணமானது முதிர்வு தொகையாக ரூ 7,24,974 ரூபாயாக இருக்கும். இந்த தொகையை நீங்கள் திரும்பப் பெறாமல் மறுபடியும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும்.

இந்த வழியில் 10 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த 5 லட்சத்தில் வட்டி மூலம் ரூபாய் 5, 51,175 உடன் பத்து வருடம் முடிவில் உங்களது தொகை ரூபாய் 10,51,175 ஆக இருக்கும். பத்து வருடங்கள் முடிந்த பின் இந்த தொகையை மீண்டும் நீங்கள் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் திட்டத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்த ஐந்து லட்சம் ரூபாய் ஆனது முதிர்வு பெற்று வட்டி மட்டுமே ரூபாய் 10, 24, 149 இருக்கும். வட்டியுடன் முதலும் சேர்த்து முதிர்வு காலத்தில் உங்கள் கையில் மொத்தம் ரூ15, 24, 149 கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் உங்களது முதலீட்டு தொகையை மூன்று மடமாக பெருக்க முடியும். உங்கள் கையில் கணிசமான ஒரு தொகையை வைத்திருந்தால் போஸ்ட் ஆபீஸில் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது உங்களுக்கு பணத்துக்கும் பாதுகாப்பாக இருக்கும் அதிக வட்டியுடன் உங்கள் பணத்தை திரும்ப பெறலாம்.

admin

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

7 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

7 மணத்தியாலங்கள் ago