பணக்கஷ்டத்திலிருந்த எம்ஜிஆர்.. ரசிகர்களுக்கு பொங்கல் பணம் கொடுக்க என்ன செய்தார் தெரியுமா..?

By Nanthini on ஆடி 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்து இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவில் ஆட்சி செய்த எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் தனி கட்சி தொடங்கி அரசியலிலும் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் வெற்றி கண்ட எம்ஜிஆர் பலருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார். சினிமாவை தாண்டி பொதுமக்களுக்கும் தன்னால் முடிந்த அளவு உதவிகளை செய்துள்ள எம்ஜிஆர் முதல்வரான பிறகு மக்கள் நலனுக்காக பல திட்டங்களை வகுத்தார். மேலும் தனது ரசிகர்கள், தன்னுடன் இருப்பவர்கள் என அனைவரையும் பாசத்துடன் அரவணைக்கும் குணம் கொண்ட எம்ஜிஆர் ஒருமுறை தன்னை சார்ந்தவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

எம்ஜிஆரே பயந்து நடுங்கிய சம்பவம்.. அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில்  நடந்த சுவாரசியம் - Cinemapettai

   

அதாவது பொங்கல் பண்டிகை நெருங்கிய அதே ஆண்டில் எம்ஜிஆர் ஏதோ ஒரு யோசனையில் அமர்ந்திருந்த நிலையில் அப்போது அங்கு வந்த ஒருவர் என்ன சோகமாக இருக்கீங்க என்று கேட்க, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று எம்ஜிஆர் கூறிய சமாளித்துள்ளார். ஆனால் எம்ஜிஆர் என்ன யோசனையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட அந்த நபர் மீண்டும் கேட்க பொங்கல் பண்டிகை வருகிறது, எல்லோருக்கும் பணம் கொடுக்க வேண்டும், ஆனால் இப்போது பணம் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார்.

   

நான் ஏன் பிறந்தேன் மெகாஹிட் திரைப்படம் | Naan Yen Pirandhen Movie | MGR, KR  Vijaya, Nagesh | HD

 

அதனைக் கேட்ட நபர் நீங்க கவலைப்பட வேண்டாம் ஒரு படம் புக் பண்ணி தரேன் சம்பளத்தை ஒரு பேமெண்டாக வாங்கிக் கொள்ளலாம் என்று கூறிய நிலையில் எம்ஜிஆரும் சரி என்று கூறியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் தயாரிப்பாளரிடம் பேசி எம்.ஜி.ஆர் சம்பளத்தை ஒரே பேமெண்ட் ஆக 15 லட்சம் வாங்கிக் கொடுத்துள்ளார். அவ்வாறு எம் ஜி ஆர் நடித்த திரைப்படம் தான் நான் ஏன் பிறந்தேன். இந்தப் படத்திற்கு வசனம் எழுதிய வியட்நாம் வீடு சுந்தரம் தான் எம்.ஜி.ஆருக்கு அந்த சம்பளத்தை முழுவதும் வாங்கி கொடுத்த நபர். பொங்கலுக்காக அவசர அவசரமாக எம்ஜிஆர் நடித்த 1972 ஆம் ஆண்டு வெளியாகி இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.