அருளை கட்சியிலிருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை… ராமதாஸ் திட்டவட்டம்..!!

By Soundarya on ஆடி 3, 2025

Spread the love

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே கருத்து மோதல் காரணமாக சமீப காலமாகவே பிரச்சனைகளை ஏற்பட்டு வருகிறது. டாக்டர் ராமதாஸிற்கு ஆதரவாக எம்எல்ஏ அருள் செயல் பட்டு வருகிறார்.  இதன் காரணமாக கட்சியின் இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் அருளை நியமனம் செய்துள்ளார். இதனையடுத்து  அன்புமணி ராமதாசுக்கு எதிராக செயல்பட்டு வரும் அருளை அந்த கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அன்புமணி அறிவித்தார்.

இது பாமக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அருளைக் கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.