ஷ்ஷ்… Replay வேணுமா..? கிரிக்கெட் போட்டியை படம் எடுத்த பாம்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on ஆடி 3, 2025

Spread the love

வங்கதேச அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதன் முதலாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கை இலங்கை அணி கைப்பற்றியது. இதனையடுத்து இந்த இரண்டு அணிகளுக்கும் முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில்களமிறங்கிய இலங்கை அணியானது 49.2 ஓவர்களில் 224 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

   

அதன்பின்னர்  களமிறங்கிய வங்காளதேச அணி ஆனது 167 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலமாக 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியானது வெற்றியை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்த போட்டியின் பொழுது மைதானத்திற்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பாம்பு  நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் பாம்பு அகற்றப்பட்டு மீண்டும் மைதானத்திலிருந்து ஆட்டம் நடைபெற்றது.