ஐயோ… நடுரோட்டில் வழிமறித்து கத்தி மிரட்டல்… ரூ 4 லட்சம் ரொக்கம், பைக்கோடு பறந்த 5 பேர் கும்பல்… பிம்ப்ரியில் பகீர் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 31, 2026

Spread the love

பிம்ப்ரியில் உள்ள ஷகுன் சௌக் பகுதியில் அக்டோபர் 29, வியாழக்கிழமை இரவு ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உலர் பழங்கள் வியாபாரம் செய்து வரும் 45 வயதான கிஷன் தமேஜா என்பவர், வழக்கம்போல் இரவு சுமார் 10:45 மணியளவில் தனது கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார்.

அவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவரைத் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் வழியை மறித்து திடீரெனத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வந்த அந்த மர்ம நபர்கள், கூர்மையான ஆயுதங்களைக் காட்டி அவரை அச்சுறுத்தி மிரட்டியுள்ளனர்.

   

https://twitter.com/ThePuneMirror/status/2116059798890545587/video/1

   

அச்சுறுத்தலுக்கு ஆளான கிஷன் தமேஜாவிடமிருந்து, அந்த நால்வர் அடங்கிய கும்பல் அவர் வைத்திருந்த ரூ 4 லட்சம் ரொக்கப் பணத்தையும் அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்துக்கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.