திமுகவுக்கு திடீர் ஷாக்…. தீவிர அரசியலில் இருந்து விலகுகிறாரா அனிதா ராதாகிருஷ்ணன்?… பின்னணியில் பரபரப்பு காரணம்….!

By Nanthini on ஐப்பசி 31, 2026

Spread the love

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எவ்விதப் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் அவர் தொடர்ந்து வீட்டிலேயே முடங்கியிருப்பது கட்சி நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தென் மண்டல மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட அவர் புறக்கணித்தது, கட்சித் தலைமை மீது அவர் தீவிர அப்செட்டில் இருப்பதையும், கட்சி நடவடிக்கைகளில் இருந்து முழுமையாக விலகி நிற்பதையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

மற்றொருபுறம், அவருடைய இந்தத் திடீர் முடிவுக்கும் விலகலுக்கும் உடல்நலக் குறைவும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தொடர் உடல் உபாதைகள் காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து முற்றிலுமாக விலக வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் அவருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகக் தெரிகிறது. கட்சித் தலைமையின் மீதான அதிருப்தி மற்றும் குடும்பத்தினரின் அறிவுறுத்தல் ஆகிய இரு வேறு காரணங்களால், அனிதா ராதாகிருஷ்ணன் தனது மாவட்டச் செயலாளர் பொறுப்பைத் துறப்பாரா அல்லது திமுக தலைமை அவரைச் சமாதானம் செய்யுமா என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைக்கு சூடுபிடித்துள்ளது.