மாவட்டத்திற்கு 3,000 பேரா?…. தனுஷ் நற்பணி மன்றத்தில் நடக்கும் மாற்றம்… ஸ்தம்பித்த திரையுலகம்…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

By Nanthini on ஐப்பசி 31, 2026

Spread the love

திரையுலக முன்னணி நடிகரான தனுஷ், தனது நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளை சட்டரீதியாக வலுப்படுத்த புதிய அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மொத்தம் 3,000 சட்ட ஆலோசகர்களை நியமிக்க அவர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நற்பணிகளில் ஈடுபடும்போது எதிர்கொள்ளும் சட்ட ரீதியான சிக்கல்கள் மற்றும் பிரச்னைகளுக்குத் தேவையான உரிய உதவிகளை உடனடியாக வழங்கும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியபோதும் நடிகர் விஜய் இதேபோன்று சட்ட ஆலோசனை குழுவை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்போது நடிகர் தனுஷும் தனது இயக்க நிர்வாகிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் பிரத்யேக சட்ட ஆலோசகர்களை நியமிக்கத் திட்டமிட்டிருப்பது, அவரது நற்பணி இயக்க நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.