தமிழக அமைச்சரவை விரிவாக்க விழா இன்று (மே 21) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வின் தொடக்கத்தில், வழக்கத்திற்கு மாறாக ‘வந்தே மாதரம்’ முதலாவதாகவும், அதனைத் தொடர்ந்து ‘தேசிய கீதம்’ இரண்டாவதாகவும் பாடப்பட்டன. இவற்றுக்கு அடுத்தபடியாகவே ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டதால், ஆளுநர் மாளிகையின் இந்த மரபு மீறிய செயல் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு முதன்முறையாகப் பதவியேற்ற பொதுவிருந்தின் போதும், தமிழ்த்தாய் வாழ்த்து முறையாக மதிக்கப்படாமல் அவமதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டியிருந்தன. அந்த சர்ச்சை ஓய்வதற்குள், இன்றைய அமைச்சரவை விரிவாக்க விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது தமிழக அரசியல் தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சிகளின் விமர்சனக் கணைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்தியாளர்களின் எண்ணிக்கை…
வங்கக்கடலில் நாளை மறுதினம் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்…
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…
மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை அதிலிருந்து நீக்கி, முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ்…
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், பெண் ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரைத் தொடர்ச்சியாக எட்டி…
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் மிகவும் பிரபலமான தீபா சதீஷ், சமீபத்தில் தனது வியக்கத்தக்க உடல் எடை குறைப்புப் பயணத்தைப்…