1 இல்ல 2 இல்ல மொத்தம் 60 கோடி ரூபாய்….! கைது செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் செய்த காரியம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2025

Spread the love

புதுச்சேரி சாரம் காமராஜர் சாலையில் கோ ப்ரீ சைக்கிள் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததால் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி போலீசார் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி கணக்கில் வராத 2 கோடியே 45 லட்ச ரூபாய் பணம் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் அது ஒரு போலியான சைக்கிள் நிறுவனம் என்பதை அறிந்த போலீசார் 13 வங்கி கணக்குகளில் இருந்த 20 கோடி ரூபாய் பணத்தை முடக்கியுள்ளனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளரான நிஷாந்த் அகமதுவை செப்டம்பர் 8-ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நிஷாந்தை காவலில் எடுத்து விசாரித்த போது 600-க்கும் மேற்பட்டவர்களிடம் முதலீடு வாங்கிக்கொண்டு மோசடி செய்வதை அவர் ஒப்புக்கொண்டார்.

   

இந்த நிலையில் மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் இருப்பதற்கு சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி என்பவர் 80 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. அவரை டி.ஐ.ஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தியிடம் நடத்திய விசாரணையில், கீர்த்தி தான் வாங்கிய பணத்தை போலீஸ் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார். இதனால் மேலும் சில உயர் அதிகாரிகள் விசாரணை நிலையத்திற்குள் வருவார்கள் என கூறப்படுகிறது.