BREAKING: அதிமுக கூட்டணி…. இரவோடு இரவாக நடந்த ரகசிய சந்திப்பு…. செம குஷியில் EPS….!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில கட்சிகள் மட்டும் இன்னும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன. இப்படியான நிலையில் NDA கூட்டணியில் மீண்டும் பாமகவை கொண்டு வரும் முயற்சி தொடங்கியுள்ளது.

சென்னையில் நேற்று இரவு அன்புமணியின் வீட்டில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாமகவின் கோரிக்கைகள், சீட்டு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அன்புமணி 25+1(RS) சீட்டு கேட்டதாக தெரிகிறது. முன்னதாக கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்த ராமதாஸிடம் கூட்டணி தொடர்பாக இபிஎஸ் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.