திடீர் திருப்பம்… இபிஎஸ் எடுத்த திடீர் முடிவு… புதிய கட்சியை தொடங்கும் ஓபிஎஸ்?… பரபரப்பு தகவல்…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மறுபக்கம் தேர்தல் பிரச்சாரம் என்ன அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் அடுத்த ஆறு மாதத்தில் தேர்தல் வர உள்ளதால் ஓபிஎஸ் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் அவருக்கு 2026 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இபிஎஸ் வழங்க மாட்டார். 2024 தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி தோல்வியை தழுவியதால் மீண்டும் அதை செய்ய விரும்பவில்லையாம். இதனால் தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ் அரசியலை விட்டு விலகப் போகிறாரா அல்லது புதிய கட்சியை தொடங்கப் போகிறாரா என்ற பேச்சு எழுந்துள்ளது.