அஜித்தின் ஆசைக்கு முட்டுக்குடுத்த LYCA.. விடாமுயற்சியின் ரிலீஸ் தேதி இதுவா..?

By Soundarya on ஜனவரி 8, 2025

Spread the love

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடா முயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க அஜர் பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

   

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்த படக்குழு அதன் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்தது. சமீபத்தில் கூட டப்பிங் பணிகளை அஜித் முடிந்த நிலையில் தற்போது பின்னணி இசைக்கான  பணிகள் நடைபெற்று வருகின்றது.ஆனால் விடா முயற்சி பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவித்த படக்குழு அதற்கான வேலைகளை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. இதனால் பல சிக்கல்கள் எழுந்துள்ளது. படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் பெற்றுள்ளது.

   

 

இந்த படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. அடுத்ததாக மொத்த படபிடிப்பு முடிந்ததாக கூறி அஜித்திற்கு மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித் தனது டப்பிங் பணிகளையும் முடித்து விட்டதாக படக்குழு அறிவித்தனர். இந்த படத்தில் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ சவதீகா ‘ லிரிக் வீடியோ வெளியாகி இருந்தது.

விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளி போவதாக தயாரிப்பு நிறுவனம்அறிவித்தது  இந்த செய்தியை ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில், ஏப்ரல் 24 ஆம் தேதியான தனது திருமண நாளன்று விடாமுயற்சி ரிலீஸ் செய்யலாம் என்று லைகாவிடம் சொல்லலாம் என அஜித் நினைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக மார்ச் மாதமே லைகா தரப்பு  வெளியிட இருப்பதாக தெரிகிறது.