MLA செய்த தவறை போட்டுகொடுத்த ஜெயலலிதா… ராஜதந்திரியாக செயல்பட்ட எம்.ஜி.ஆர்…

By admin on தை 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி அதன் வழி நடந்தவர் எம்ஜிஆர்.

   

குடும்ப வறுமையின் காரணமாக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின்னர் நடிகராக உயர்ந்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார் எம்ஜிஆர். எம்ஜிஆர் படங்கள் என்றாலே சமூக நீதிக் கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் க்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். எம்ஜிஆர் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.

   

தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். இவருக்கு இருந்தவர்லெல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்றே சொல்லலாம்.

 

எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். தன்னை தாடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர். அதேபோல் யாரேனும் தன்னை சார்ந்தவர்கள் தவறு செய்து விட்டால் அதை ஒரு காலமும் எம்ஜிஆர் ஆல் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வளவு எளிதில் யாரையும் மன்னிக்கவே மாட்டார். அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது அரசின் அமைச்சர்கள் குழு சிங்கப்பூருக்கு அரசு வேலை நிமித்தமாக சென்று இருந்தார்கள். அப்போது எம்எல்ஏக்களில் ஒருவரான தாமரைக்கனி, சிங்கப்பூரில் குடித்துவிட்டு போதையில் ஹோட்டலில் அட்டகாசம் செய்திருக்கிறார். அவரை போலீசார் பிடித்து சென்றிருக்கின்றனர். பிறகு கையில் காலில் விழுந்து அங்கிருந்து அமைச்சர்கள் எம்ஜிஆர் பெயரை சொல்லி அவரை கூட்டி வந்து விட்டார்கள்.

இதை நண்பர்கள் மூலம் அறிந்த ஜெயலலிதா உடனே இந்த விஷயத்தை எம்ஜிஆர் இடம் கூறியிருக்கிறார். உடனே எம்ஜிஆர் கோபத்தில் அவரை கட்சியிலிருந்து நீக்கிவிடுகிறேன் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறிவிட்டார். வெளிநாட்டில் இருந்து வந்த தாமரைக்கனி இப்படி ஒரு தவறை செய்துவிட்டோமே என்று எம்ஜிஆரை பார்க்க சென்றார். எம்ஜிஆர் என் கண் முன்னால் அவரை நிற்க வேண்டாம் என்று கூறி பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. பிறகு நாள் முழுவதும் எம்ஜிஆரின் அலுவலக வாசலிலேயே நின்று கொண்டிருந்த தாமரைக்கனி இரவு எம்ஜிஆர் கிளம்பும்போது அவர் காலை பிடித்து கதறி மன்னிப்பு கேட்டார். அப்படி இவர் செய்த தவறை சுட்டிக்காட்டி ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்குமாறு பத்திரிகையில் அறிவித்து விடுங்கள் என்று கூறினார். ஆனால் எம்ஜிஆர் யாருக்கும் பாதிப்பின்றி தவறு செய்தவர் உணரும் வகையில் ராஜதந்திரியாக செயல்பட்டு இருக்கிறார்.