யூடியூபில் வெளியான ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடர் மூலமாக பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பிரிகிடா சாகா. தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் விஜயின் மாஸ்டர் மற்றும் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்துகிறார் நடிகை பிரிகிடா சாகா. இரவின் நிழல் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியது மட்டும் இல்லாமல் அந்த படத்தின் ஹீரோயினாகவும் நடித்திருந்தார்.

இந்த படத்தில் ஆடையின்றி சில காட்சிகளில் அவர் நடித்திருந்தது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது. அப்போது, நான் ன் ஆடை இன்றி நடிக்கவில்லை. அதற்கு மாறாக உடலோடு ஒட்டிய எலாஸ்டிக் போன்ற ஒரு பேண்டை அணிந்திருந்தேன். அந்த பேண்டை முட்டிக்கு மேல் தூக்கி விட்டால் உடையே அணியாதது போலத்தான் தோற்றமளிக்கும். அப்படித்தான் அந்த காட்சியை படமாக்கினோம் என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது கிரைம் கில்லர் ஜானரில் உருவாகக்கூடிய வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவித்து வரும் நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இணையத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் அவர் ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக தன்னுடைய அழகுகளை மறைத்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் வகையில் ஆடைகளை அடைந்து கொண்டு ரசிகர்களின் கண்களை உறுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொபைல் ப்ரொமோஷனில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பவி டீச்சரா இது மாடர்ன் டிரஸ்ஸில் ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாங்களே என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
