உடல்கள் அழுகாத ஊர்….! 1950 முதல் இங்கு யாரும் இறக்காதது ஏன்…? நார்வே தீவின் அதிர வைக்கும் ரகசியம்…!!

By Devi Ramu on தை 12, 2026

Spread the love

நார்வே நாட்டுக்குச் சொந்தமான ‘ஸ்வல்பார்டு’ தீவுக்கூட்டத்தில் உள்ள லாங்யியர்பியன் நகரத்தில், கடந்த 1950-ம் ஆண்டு முதல் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற ஆச்சரியமான தகவல் வெளியாகியுள்ளது. இங்கு நிலவும் அதீத குளிரால் நிலம் எப்போதும் உறைந்தே இருப்பதால், புதைக்கப்படும் உடல்கள் அழுகுவதே இல்லை. இதனால் 1918-ல் கொடிய வைரசால் பலர் இறந்தனர்.

கொடிய வைரஸ்கள் இன்றும் அந்த உடல்களில் உயிருடன் இருப்பது ஆய்வில்  கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, இந்த ஊரில் யாரும் இறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. யாராவது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தால், அவர்கள் உடனடியாக நார்வேயின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

   

இந்த ஊரில் இறப்புக்கு மட்டுமல்லாமல், பிரசவத்திற்கும் மருத்துவ வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகள் முன்கூட்டியே வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பது விதியாகும். அதேநேரம், இந்தியர்கள் உட்படப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வேலை செய்ய விசா தேவையில்லை.

   

ஆனால் கைநிறைய வருமானம் இருக்க வேண்டியது கட்டாயம். ஊருக்கு வெளியே பனிக்கரடிகளின் நடமாட்டம் அதிகம் என்பதால், தற்காப்புக்காகத் துப்பாக்கி ஏந்திச் செல்வதும் இங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்படிப் பல விசித்திரமான சட்டங்களைக் கொண்ட இந்த ஊர், உலகின் ‘மரணமே இல்லாத நகரமாக’க் கருதப்படுகிறது.