அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, இன்னும் ஓரிரு நாட்களில் புதிய கட்சி ஒன்று அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாகவும், மேலும் பல கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
