பெண்களுக்கு இனிப்பான செய்தி..! மகளிர் உரிமைத்தொகை ரூ.1500 ஆக உயர்வு..? வெளியான அறிவிப்பு..!!

By Soundarya on தை 12, 2026

Spread the love

தமிழகத்தில் பெண்களுக்கு ‘விரைவில் ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது’ என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ள கருத்து, மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு பேசியதைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் ₹1,000 உதவித்தொகை, ₹1,500 ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த அறிவிப்பு குடும்பத் தலைவிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முக்கிய அறிவிப்பானது, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறுமா அல்லது திமுகவின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படுமா என்பது குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், பெண்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இந்த உரிமைத்தொகை உயர்வு அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.