கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்கட்சி பூசல் காரணமாக முதலமைச்சர் விஜய்யின் பேனர் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது, அங்கு திரண்டிருந்த அக்கட்சியின் இரு பிரிவினரிடையே திடீரென கடுமையான வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது. இந்த உள்கட்சி மோதலின் உச்சகட்டமாக, அங்கிருந்த முதலமைச்சர் விஜய்யின் பிளெக்ஸ் பேனர்கள் கிழித்து அகற்றப்பட்டன.
விஜய் நடிகராக இருந்த காலம் தொட்டே அவரது ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தற்போதைய அரசியல் கட்சி என பல ஆண்டுகளாக தாங்கள் கடுமையாக உழைத்துள்ளதாக தவெக-வின் அடிமட்ட நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது மாற்றுக்கட்சிகளில் இருந்து புதிதாக வருபவர்களுக்கு மட்டுமே கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், மக்கள் இயக்கக் காலத்தில் இருந்து உழைத்த தங்களை போன்ற நிர்வாகிகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவும் தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…