பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தொடங்கி வெள்ளித்திரையில் இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் ரோபோ சங்கர். இவரின் மனைவி மற்றும் மகளும் சினிமா துறையில் பிரபலமானார் தான்.
மகள் இந்த்ரஜா சங்கர் பிகில் மற்றும் விருமன் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக பிகில் படத்தில் அவர் ஏற்று நடித்த பாண்டியம்மா கதாபாத்திரம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்தநிலையில், இந்த்ரஜா திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க உள்ளார். தனது சொந்த மாமாவை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார் இந்த்ரஜா.
சமீபத்தில் இவர்களின் சொந்த ஊரில் வைத்து அவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்தநிலையில், இந்தராஜா சங்கர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது நிச்சயதார்த்த நிகழ்வில் அப்பாவுக்கு உதட்டோடு முத்தம் கொடுத்துள்ளார் இந்த்ரஜா, இதைத்தான் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். யாராவது அப்பாவுக்கு இப்படி முத்தம் கொடுப்பார்கள், கலாச்சாரம் என்பதே இல்லை என இந்த்ரஜாவை திட்டி தீர்த்து வருகிறார்கள். இதற்கு இந்த்ரஜா தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, அவர் என் அப்பா அவருக்கு நான் முத்தம் கொடுத்ததில் என்ன தவறு. நான் குழந்தையாக இருந்தபோது இருந்து என் அப்பாவுக்கு முத்தம் கொடுத்து வருகிறேன். இதில் தவறு இல்லை. தவறாக பேசாதீர்கள் என கொந்தளித்துள்ளார். என்னதான் அவர்கூறினாலும், அதற்கும் சிலர் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.